என்னை மறந்து விட
உங்களால் இயலாது;
நான் உங்கள் நினைவுகளில்
குடியிருந்தவனல்ல;
உங்கள் நினைவுகளே நான்தான்.
Friday, March 13, 2009
Sunday, March 8, 2009
Wednesday, March 4, 2009
பாரதி
பாரதம் செய்த தவம்
பாரதி இங்கே பிறந்தது;
எட்டையபுரத்தில்
தோன்றிய அந்த பார'தீ'
எட்டு திசைகளிலும்
சுடரென பிரகாசித்தது;
பாட்டுத் தலைவன்
ஒரு தேசத் தலைவனாய்
அங்கீகரிக்கப்பட்டது
பாரதி வரையில்தான்;
அடிமைத் தனத்திற்கு
எதிராக உதித்து வந்த
அவன் பாடல்களுக்கு
நாட்டு மக்களே
அடிமையான அதிசயம்
இங்கே நிகழ்ந்தது;
பாரதியின் பார்வையில்
வீரம் விளையாடும்;
அவன் பாடல்களில்
கோபம் அலைமோதும்;
கொடுமைகளுக்கு எதிராக
தீயாய் கொதித்தவன்
காதலின் முன்பு
மழையாய் பொழிந்தான்;
தமிழுக்கு வளம் சேர்த்த
கவிஞன்; அவன்
தமிழர் வாழ்வுக்கு
மெருகேற்றிய கலைஞன்;
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது;
அதனால்தான் பாரதி,
ஜாதிகள் இல்லையடி
என்றுபாப்பாவுக்கு உரைத்தான்;
வெள்ளையர்
சாதிக்கு மட்டும்
அவன் பாடல்கள்
தீ மூட்டவில்லை;
சில மூடர்கள் பேசிய
சாதி பேதத்திற்கும்
அது தீ மூட்டியது;
அவன் எழுதுகோலிலிருந்து
பிரசவித்த
ஒவ்வொரு எழுத்தும்
புதுமை புதுமை
என்றே முழக்கமிட்டன;
'காக்கை குருவி எங்கள் சாதி'
மனிதாபிமானத்தின்
பொருள் இங்கே
புதிய பொலிவோடு
விளங்குகிறது;
மேகங்கள் மழை பொழிய
பேதம் பார்ப்பதில்லை;
பாரதியின் கவிதைகளும்
ஏழை பணக்காரன்
பேதம் காணவில்லை;
'எல்லோரும் ஒர் குலம்
எல்லோரும் ஒர் நிறை'
ஆஹா.. பாரதி,
நீதான் இந்நாட்டு மன்னன்;
புகழுக்காக பாரதி
கவிதை எழுதவில்லை;
அவன் கவிதையிடம்தான்
புகழ் சரணடைந்தது;
நாட்டு விடுதலைக்காகப்
பாடியவன்
நமது வீட்டுப் பெண்
விடுதலைக்கும்
போராடினான்;
சக்திதாசன் அவன்;
அவனது
சக்தி வழிபாட்டில் கூட,
பொங்கியெழுந்தது
தேசபக்தி;
பாரத நாடு
பார்க்கெலாம் திலகம்;
பாரதி
பாரத நாட்டின் திலகம்.
பாரதி இங்கே பிறந்தது;
எட்டையபுரத்தில்
தோன்றிய அந்த பார'தீ'
எட்டு திசைகளிலும்
சுடரென பிரகாசித்தது;
பாட்டுத் தலைவன்
ஒரு தேசத் தலைவனாய்
அங்கீகரிக்கப்பட்டது
பாரதி வரையில்தான்;
அடிமைத் தனத்திற்கு
எதிராக உதித்து வந்த
அவன் பாடல்களுக்கு
நாட்டு மக்களே
அடிமையான அதிசயம்
இங்கே நிகழ்ந்தது;
பாரதியின் பார்வையில்
வீரம் விளையாடும்;
அவன் பாடல்களில்
கோபம் அலைமோதும்;
கொடுமைகளுக்கு எதிராக
தீயாய் கொதித்தவன்
காதலின் முன்பு
மழையாய் பொழிந்தான்;
தமிழுக்கு வளம் சேர்த்த
கவிஞன்; அவன்
தமிழர் வாழ்வுக்கு
மெருகேற்றிய கலைஞன்;
ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையாது;
அதனால்தான் பாரதி,
ஜாதிகள் இல்லையடி
என்றுபாப்பாவுக்கு உரைத்தான்;
வெள்ளையர்
சாதிக்கு மட்டும்
அவன் பாடல்கள்
தீ மூட்டவில்லை;
சில மூடர்கள் பேசிய
சாதி பேதத்திற்கும்
அது தீ மூட்டியது;
அவன் எழுதுகோலிலிருந்து
பிரசவித்த
ஒவ்வொரு எழுத்தும்
புதுமை புதுமை
என்றே முழக்கமிட்டன;
'காக்கை குருவி எங்கள் சாதி'
மனிதாபிமானத்தின்
பொருள் இங்கே
புதிய பொலிவோடு
விளங்குகிறது;
மேகங்கள் மழை பொழிய
பேதம் பார்ப்பதில்லை;
பாரதியின் கவிதைகளும்
ஏழை பணக்காரன்
பேதம் காணவில்லை;
'எல்லோரும் ஒர் குலம்
எல்லோரும் ஒர் நிறை'
ஆஹா.. பாரதி,
நீதான் இந்நாட்டு மன்னன்;
புகழுக்காக பாரதி
கவிதை எழுதவில்லை;
அவன் கவிதையிடம்தான்
புகழ் சரணடைந்தது;
நாட்டு விடுதலைக்காகப்
பாடியவன்
நமது வீட்டுப் பெண்
விடுதலைக்கும்
போராடினான்;
சக்திதாசன் அவன்;
அவனது
சக்தி வழிபாட்டில் கூட,
பொங்கியெழுந்தது
தேசபக்தி;
பாரத நாடு
பார்க்கெலாம் திலகம்;
பாரதி
பாரத நாட்டின் திலகம்.
Subscribe to:
Posts (Atom)