Wednesday, March 4, 2009

பாரதி

பாரதம் செய்த தவம்
பாரதி இங்கே பிறந்தது;

எட்டையபுரத்தில்
தோன்றிய அந்த பார'தீ'
எட்டு திசைக‌ளிலும்
சுட‌ரென‌ பிர‌காசித்த‌து;

பாட்டுத் த‌லைவ‌ன்
ஒரு தேச‌த் த‌லைவ‌னாய்
அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து
பாரதி வ‌ரையில்தான்;

அடிமைத் த‌ன‌த்திற்கு
எதிராக‌ உதித்து வ‌ந்த‌
அவ‌ன் பாட‌ல்க‌ளுக்கு
நாட்டு ம‌க்க‌ளே
அடிமையான‌ அதிச‌ய‌ம்
இங்கே நிக‌ழ்ந்த‌து;

பார‌தியின் பார்வையில்
வீர‌ம் விளையாடும்;
அவ‌ன் பாட‌ல்க‌ளில்
கோப‌ம் அலைமோதும்;

கொடுமைக‌ளுக்கு எதிராக‌
தீயாய் கொதித்த‌வ‌ன்
காத‌லின் முன்பு
ம‌ழையாய் பொழிந்தான்;

த‌மிழுக்கு வ‌ள‌ம் சேர்த்த‌
க‌விஞ‌ன்; அவ‌ன்
த‌மிழ‌ர் வாழ்வுக்கு
மெருகேற்றிய‌ க‌லைஞ‌ன்;

ஐந்தில் வ‌ளையாத‌து
ஐம்ப‌தில் வ‌ளையாது;
அத‌னால்தான் பார‌தி,
ஜாதிக‌ள் இல்லைய‌டி
என்றுபாப்பாவுக்கு உரைத்தான்;

வெள்ளைய‌ர்
சாதிக்கு ம‌ட்டும்
அவ‌ன் பாட‌ல்க‌ள்
தீ மூட்ட‌வில்லை;
சில‌ மூட‌ர்க‌ள் பேசிய‌
சாதி பேத‌த்திற்கும்
அது தீ மூட்டிய‌து;

அவ‌ன் எழுதுகோலிலிருந்து
பிர‌ச‌வித்த‌
ஒவ்வொரு எழுத்தும்
புதுமை புதுமை
என்றே முழ‌க்க‌மிட்ட‌ன‌;

'காக்கை குருவி எங்க‌ள் சாதி'
ம‌னிதாபிமான‌த்தின்
பொருள் இங்கே
புதிய‌ பொலிவோடு
விள‌ங்குகிற‌து;

மேக‌ங்க‌ள் மழை பொழிய‌
பேத‌ம் பார்ப்ப‌தில்லை;
பாரதியின் க‌விதைக‌ளும்
ஏழை ப‌ண‌க்கார‌ன்
பேத‌ம் காண‌வில்லை;

'எல்லோரும் ஒர் குல‌ம்
எல்லோரும் ஒர் நிறை'
ஆஹா.. பாரதி,
நீதான் இந்நாட்டு ம‌ன்ன‌ன்;

புக‌ழுக்காக‌ பாரதி
க‌விதை எழுத‌வில்லை;
அவ‌ன் க‌விதையிட‌ம்தான்
புக‌ழ் ச‌ர‌ண‌டைந்த‌து;

நாட்டு விடுத‌லைக்காகப்
பாடிய‌வ‌ன்
ந‌ம‌து வீட்டுப் பெண்
விடுத‌லைக்கும்
போராடினான்;

ச‌க்திதாச‌ன் அவ‌ன்;
அவ‌ன‌து
ச‌க்தி வ‌ழிபாட்டில் கூட‌,
பொங்கியெழுந்த‌து
தேச‌ப‌க்தி;

பார‌த‌ நாடு
பார்க்கெலாம் தில‌க‌ம்;
பாரதி
பார‌த‌ நாட்டின் தில‌க‌ம்.

No comments:

Post a Comment