
உனக்கு மரணமில்லை;
உலகத் தமிழர்களின்
கோடானு கோடி உள்ளங்களில்
நீ என்றும் வாழ்கிறாய்.
நீ ஒரு சரித்திரம்;
நீ இல்லாமல்
தமிழர் சரித்திரமில்லை.
தமிழர் இனத்தை
உலகறியச் செய்த
உன்னத சாதனையாளன்.
கருணாக்களால்
நீ காட்டிக் கொடுக்கப்பட்டாலும்
களங்காமல் களம் கண்டாய்.
ஒரு தமிழ்க் குழந்தை
இருக்கும் வரை
உன் பெயர் இருக்கும்.
நீ ஓய்வு காணா போராளி;
அடிமைத்தனத்திற்கெதிராக
சமரசம் காணாத வீரன்.
நீ தமிழன் என்பதால்
எங்களுக்கெல்லாம் பெருமை.
மாவீரன் பிரபாகரனே..
மண்ணில் பிற்ந்தோர்க்கெல்லாம்
உன் போராட்டம் ஒரு வழிகாட்டி;
நீ ஏற்றி வைத்த தீப்பிழம்பு
தமிழர்க்கென்றும் கலங்கரை விளக்கம்.
தமிழ் போல என்றும் நீ
உலகில் நிலைத்து நிற்பாய்.
No comments:
Post a Comment