தேர்தல் திருவிழா
ஆரம்பமாகி விட்டது;
கிராமத்துச் சாலைகள் கூட
இளம் பெண்ணின் கன்னமாய்
பள்பளக்கும்
தெருவெங்கும் விளக்குகள்
பட்டப் பகலில் கூட,
தகதகக்கும்;
ரேஷன் கடைகளில்,
அரிசி மண்ணெண்ணெய்
குறையாமல் கிடைக்கும்;
அம்மாவுக்கும் அய்யாவுக்கும்
வேட்டிசேலைகள்
இலவசமாய் கிடைக்கும்;
பெரிய தலைவர்கள் எல்லாம்
சின்ன குடிசைகளைத்
தேடி வருவார்கள்;
கும்பிட்ட கைகளுடன்
குனிந்த தலையுடன்
பல் தெரிய சிரிப்பார்கள்;
கால்சட்டை போட்ட
சிறுவர் காலில் கூட,
தயக்கமின்றி விழுவார்கள்;
தள்ளாடும் பாட்டிகளை
கட்டித்தழுவி
சொந்தம் கொண்டாடுவார்கள்;
சொகுசு கார் பவனி போய்
சுளீர் வெயிலில்
வெறும் காலில் நடப்பார்கள்;
அண்ணே சௌக்கியமா..
அம்மா சௌக்கியமா..
அன்பு மழை பொழிவார்கள்;
தடுக்கி விழுந்தாலும்
ஐயோ..அடிபட்டு விட்டதா..
இந்தா ஆயிரம் என்பர்கள்;
கறி விருந்து பாயாசத்துடன்
சாப்பாடு போட்டு
ஆயிரமாய் அள்ளித் தருவார்கள்;
குடிசைகளை மாற்றி,
எரியாத மச்சு வீடு
கட்டித் த்ருவோமென்பார்கள்;
குழந்தைகளின் கல்விக்கு,
தெருவெங்கும் பள்ளிக்கூடம்
வருமென்பார்கள்;
ஒருவேளை சோற்றுக்கு
தவித்த காலம் போய்
நான்கு வேளை சாப்பிடலாம்;
வருவாய்க்கு வழி செய்வோம்;
திட்டங்கள் தருவோம்;
போடுங்கள் வாக்குகளென்பார்கள்;
எல்லாம் ஒரிரு மாதம்தான்;
தேர்தல் நாள் வரைதான்;
முடிந்ததும் காதில் பூ தான்;
தேர்தல் திருவிழாவும் முடியும்;
காணாமல் போன குழந்தையாய்
நாம் மக்கள்
.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment