Friday, October 16, 2009

தீபாவளி வாழ்த்துக்கள்



.
தீபங்களின் ஒளியில்

இருள் ஒழியும்;

தீபாவளித் திருநாள்

தீமை வெல்லப்பட்டதின்

ஒரு அடையாளம்;

ஒருவருக்கு ஒருவர்

வாழ்த்துக்க‌ள் சொல்லி,

இன்ப‌ங்க‌ளை ப‌கிர்ந்து,

ந‌ன்மையின் வெற்றியை

கொண்டாடி ம‌கிழ்வோம்;

ப‌ட்டாடை உடுத்தி,

ப‌ட்டாசுக‌ள் கொளுத்தி,

ப‌ல‌கார‌ங்க‌ள் உண்டு,

எங்கும் ம‌கிழ்ச்சியாய்

ந‌ன்மையை வ‌ர‌வேற்போம்.

எல்லோரும் எல்லா

வளமும் பெற்று

ஏழைக‌ளின் இல்ல‌ங்க‌ளில்

ஏற்ற‌ம் மிகுந்து,

என்றும் இனிமை மிகுந்து

எங்கும் ஒளிம‌ய‌மாய் வாழ‌,

தீபாவளி நன்னாள் வ‌ழி காண‌ட்டும்;

க‌திர‌வ‌ன் உத‌ய‌த்தில்

வெளிச்ச‌ம் பெருகுவது போல்

தீபாவ‌ளித் திருநாளில்

ந‌ன்மைக‌ளும் ச‌ந்தோச‌ங்க‌ளும்

வெள்ள‌மென‌ பெருகி

எங்கும் ப‌ர‌வ‌ட்டும்.

Tuesday, May 19, 2009

த‌மிழ‌ர் ச‌ரித்திர‌மே..

மாவீரனே,
உனக்கு மரணமில்லை;
உலகத் தமிழர்களின்
கோடானு கோடி உள்ளங்களில்
நீ என்றும் வாழ்கிறாய்.
நீ ஒரு ச‌ரித்திர‌ம்;
நீ இல்லாம‌ல்
த‌மிழ‌ர் ச‌ரித்திர‌மில்லை.
த‌மிழ‌ர் இன‌த்தை
உல‌க‌றிய‌ச் செய்த‌
உன்ன‌த‌ சாத‌னையாள‌ன்.
க‌ருணாக்க‌ளால்
நீ காட்டிக் கொடுக்க‌ப்ப‌ட்டாலும்
க‌ள‌ங்காம‌ல் க‌ள‌ம் க‌ண்டாய்.
ஒரு த‌மிழ்க் குழ‌ந்தை
இருக்கும் வ‌ரை
உன் பெய‌ர் இருக்கும்.
நீ ஓய்வு காணா போராளி;
அடிமைத்த‌ன‌த்திற்கெதிராக‌
ச‌ம‌ர‌ச‌ம் காணாத‌ வீர‌ன்.
நீ த‌மிழ‌ன் என்ப‌தால்
எங்க‌ளுக்கெல்லாம் பெருமை.
மாவீர‌ன் பிர‌பாக‌ர‌னே..
ம‌ண்ணில் பிற்ந்தோர்க்கெல்லாம்
உன் போராட்டம் ஒரு வழிகாட்டி;
நீ ஏற்றி வைத்த‌ தீப்பிழ‌ம்பு
த‌மிழ‌ர்க்கென்றும் க‌ல‌ங்க‌ரை விள‌க்க‌ம்.
த‌மிழ் போல‌ என்றும் நீ
உல‌கில் நிலைத்து நிற்பாய்.

Friday, March 13, 2009

நினைவு

என்னை மறந்து விட‌
உங்களால் இயலாது;
நான் உங்கள் நினைவுகளில்
குடியிருந்தவனல்ல;
உங்கள் நினைவுகளே நான்தான்.

Sunday, March 8, 2009

இணை

நிழலும் உடலும் இணைபிரியாதவை;

இணையவும் முடியாதவை.

தழுவல்

மேகங்கள் அன்போடு
நிலவைத் தழுவின;
நிலவு ஒளியிழந்து போனது.

Wednesday, March 4, 2009

பாரதி

பாரதம் செய்த தவம்
பாரதி இங்கே பிறந்தது;

எட்டையபுரத்தில்
தோன்றிய அந்த பார'தீ'
எட்டு திசைக‌ளிலும்
சுட‌ரென‌ பிர‌காசித்த‌து;

பாட்டுத் த‌லைவ‌ன்
ஒரு தேச‌த் த‌லைவ‌னாய்
அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌து
பாரதி வ‌ரையில்தான்;

அடிமைத் த‌ன‌த்திற்கு
எதிராக‌ உதித்து வ‌ந்த‌
அவ‌ன் பாட‌ல்க‌ளுக்கு
நாட்டு ம‌க்க‌ளே
அடிமையான‌ அதிச‌ய‌ம்
இங்கே நிக‌ழ்ந்த‌து;

பார‌தியின் பார்வையில்
வீர‌ம் விளையாடும்;
அவ‌ன் பாட‌ல்க‌ளில்
கோப‌ம் அலைமோதும்;

கொடுமைக‌ளுக்கு எதிராக‌
தீயாய் கொதித்த‌வ‌ன்
காத‌லின் முன்பு
ம‌ழையாய் பொழிந்தான்;

த‌மிழுக்கு வ‌ள‌ம் சேர்த்த‌
க‌விஞ‌ன்; அவ‌ன்
த‌மிழ‌ர் வாழ்வுக்கு
மெருகேற்றிய‌ க‌லைஞ‌ன்;

ஐந்தில் வ‌ளையாத‌து
ஐம்ப‌தில் வ‌ளையாது;
அத‌னால்தான் பார‌தி,
ஜாதிக‌ள் இல்லைய‌டி
என்றுபாப்பாவுக்கு உரைத்தான்;

வெள்ளைய‌ர்
சாதிக்கு ம‌ட்டும்
அவ‌ன் பாட‌ல்க‌ள்
தீ மூட்ட‌வில்லை;
சில‌ மூட‌ர்க‌ள் பேசிய‌
சாதி பேத‌த்திற்கும்
அது தீ மூட்டிய‌து;

அவ‌ன் எழுதுகோலிலிருந்து
பிர‌ச‌வித்த‌
ஒவ்வொரு எழுத்தும்
புதுமை புதுமை
என்றே முழ‌க்க‌மிட்ட‌ன‌;

'காக்கை குருவி எங்க‌ள் சாதி'
ம‌னிதாபிமான‌த்தின்
பொருள் இங்கே
புதிய‌ பொலிவோடு
விள‌ங்குகிற‌து;

மேக‌ங்க‌ள் மழை பொழிய‌
பேத‌ம் பார்ப்ப‌தில்லை;
பாரதியின் க‌விதைக‌ளும்
ஏழை ப‌ண‌க்கார‌ன்
பேத‌ம் காண‌வில்லை;

'எல்லோரும் ஒர் குல‌ம்
எல்லோரும் ஒர் நிறை'
ஆஹா.. பாரதி,
நீதான் இந்நாட்டு ம‌ன்ன‌ன்;

புக‌ழுக்காக‌ பாரதி
க‌விதை எழுத‌வில்லை;
அவ‌ன் க‌விதையிட‌ம்தான்
புக‌ழ் ச‌ர‌ண‌டைந்த‌து;

நாட்டு விடுத‌லைக்காகப்
பாடிய‌வ‌ன்
ந‌ம‌து வீட்டுப் பெண்
விடுத‌லைக்கும்
போராடினான்;

ச‌க்திதாச‌ன் அவ‌ன்;
அவ‌ன‌து
ச‌க்தி வ‌ழிபாட்டில் கூட‌,
பொங்கியெழுந்த‌து
தேச‌ப‌க்தி;

பார‌த‌ நாடு
பார்க்கெலாம் தில‌க‌ம்;
பாரதி
பார‌த‌ நாட்டின் தில‌க‌ம்.

Saturday, February 28, 2009

வேண்டும்


பாதைகள்
முட்களாகும் போது
பாதங்களுக்கு
உறுதி வேண்டும்

தோல்விக‌ள்
தொட‌ரும் போது
துவ‌ண்டு விடாத‌
நெஞ்ச‌ம் வேண்டும்;

ப‌ய‌ண‌ங்க‌ள்
மாறும் போது
ம‌ன‌திற்குள்
தெளிவு வேண்டும்;

எதிர்ப்புக‌ள்
அதிக‌ரிக்கும் போது
ப‌ணிந்து விடாத‌
எண்ண‌ம் வேண்டும்.