மகத்தானவைகள்
என்றும்
வலி நிறைந்தவை;
பாதையில் தடைகள்
அதிகம் என்றால்,
இலக்கு உயர்ந்ததாயிருக்கும்;
காய்க்காத மரத்தின் மேல்
யாரும் கல்லெறிந்து
கொண்டிருக்க மாட்டார்கள்;
வைரம்தான்
பட்டை தீட்டப்படும்;
மௌனம்தான் விசாரிக்கப்படும்;
அழுகை புலம்பல்
சாதிக்கப் பிறந்தவர்களின்
தடைக் கற்கள்;
எதிலும் வெற்றி;
இலக்கு மட்டுமல்ல,
வாழ்க்கையே அதுதான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment