மௌனம் சிறந்தது;
என்றாலும், மௌனம்
மட்டும்தான் சிறந்ததல்ல..
பேசித்தான் பாரேன்;
வார்த்தைகளுக்கும்
மதிப்பிருக்கவே செய்கிறது.
காதல் மொழிகள்
வேண்டாம்; அட..
காக்கை குருவி பற்றிப் பேசேன்.
எது உன்னைத் தடுக்கிறது..?
வெட்கமா..தயக்கமா..?
அல்லது கர்வமா..?
அ,ஆ,இ,ஈ யாவது சொல்லு;
நீ ஊமை இல்லை
என்பதயாவது அறிந்து கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment