கடுமையான வெயில்
நிற்க நிழல் கிடைக்குமா
ஏங்கித் தவித்தன
கண்களும் மனதும்;
சற்றுத் தொலைவில் ஒரு மூதாட்டி,
காலில் செருப்பு கூட இன்றி,
கொதிக்கும் தாரில் ஜல்லி கலந்து
சாலைப்பணி செய்து கொண்டிருந்தாள்;
இப்போது வெயில்
என்னைச் சுடவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment